News

Black Urad Dal Porridge (உளுந்தங்கஞ்சி)
Step 1 :
Take a spoon of Merna Black urad dal porridge mix powder in
a thick bowl.
அடி கனமான பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி மெர்னா கருப்புளுந்தங்கஞ்சி மாவு பொடியை எடுத்துக் கொள்ளவும்.
Step 2 :
Add required water
தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
Step 3 :
Stir it, make it lumps free
கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
Step 4 :
Boil it for about 15 mins
15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
Step 5 :
Once thicken and cooked., transfer it to tumbler and add a
teaspoon of country sugar
மாவு வெந்து பதம் வந்தவுடன், ஒரு டம்ளருக்கு மாற்றி, நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.
Step 6 :
Enjoy the tasty and health black urad dal porridge
சுவையான
மற்றும் ஆரோக்கியமான கருப்புளுந்தங்கஞ்சியை குடித்து மகிழுங்கள்..

அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிகழ்வின் தொகுப்பு (Glimpse of Beauty Products making workshop)
இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
இன்றைய உலகில் ரசாயனங்கள் கலந்த அழகு சாதனங்கள் உடல் நலத்திற்கும், சரும நலத்திற்கும் பாதிப்பு அளிப்பதை உணர்ந்த மக்கள், இயற்கை சார்ந்த தயாரிப்புகளை அதிகம் விரும்புகின்றனர்.
இந்தப் பயிற்சியின் மூலம், குளியல் சோப், பாத்திரம் கழுவும் சோப், கண்மை, உதட்டு களிம்பு போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பொருட்களை இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி எளிதில் தயாரிப்பது கற்றுக்கொள்ளலாம்.
இந்த பயிற்சி, தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல், சிறு தொழில் முயற்சியாகவும் பயன்படுத்தி வருமானம் ஈட்டும் வாய்ப்பை தருகிறது.
நடந்து முடிந்த இந்த வகுப்பின் தொகுப்பு
https://www.instagram.com/reel/DN3JeD75K0_/?igsh=ZjBnNWp5cDdyeXM3

பனை ஓலை பயிற்சி மற்றும் கூடல்
பனை நமது இயற்கை வாழ்வியலில் எவ்வளவு முக்கியம் என நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக தெரியும்.. பனையோலை கொண்டு நமக்கு வேண்டிய பொருட்களையும் தயார் செய்து, மேலும் விற்பனைக்கும் ஏற்றவாறு எப்படி செய்ய வேண்டும் என இந்த இரண்டு நாள் பயிற்சியில் நீங்கள் முழுமையாக கற்று கொள்வீர்கள்.. மேலும் தற்சார்பு வாழ்வியல், பாரம்பரிய உணவு முறை குறித்த புரிதல்களும் கிடைக்கப்பெறும்..
*நேரடி வகுப்பு*
*பயிற்சி நாள்*: 20.9.25 & 21.9.25
*இடம்*: மெர்னா இயற்கை வாழ்வியல் மையம், செங்கல்பட்டு
*கட்டணம்* : ரூ.1600 (இரண்டு நாட்கள் பயிற்சி ஏற்பாடுகள், பாரம்பரிய மதிய உணவு, சிற்றுண்டி உட்பட)
கட்டணம் குறித்த தகவல்:
பனையோலை பெட்டி முடைதல் ஒரு காலத்தில் அனைவரும் எளிமையாக செய்த ஒன்று தான்.. ஆனால் இப்போது அதற்கான ஆதாரங்கள் அழிந்து கொண்டு வருகிறது..
ஆர்வமுள்ளவர்களுக்கு திறமைகளை கடத்தும் நோக்கில் செயல்முறை பயிற்சியை முன்னெடுக்கிறோம்..
☘️ஆன்லைன் வகுப்பிற்கும், நேரடி வகுப்பிற்கும் வித்தியாசம் உள்ளது..
☘️ஹோட்டல் உணவுக்கும், அன்பாய், ஆசையாய் வீட்டில் செய்யப்படும் பாரம்பரிய உணவுக்கும் வித்தியாசம் உள்ளது..
☘️அடைத்த அறையில் கற்கும் அனுபவத்திற்கும், இயற்கை சூழலில் இயற்கை குடிலில் கற்கும் அனுபவத்திற்கும் வித்தியாசம் உள்ளது..
☘️ஸ்பான்ஸர்ஸ் மூலமாக நடத்தப்படும் வகுப்பின் செலவுகளுக்கும், தனி ஒரு அமைப்பாக உண்மையான, நல்ல செய்திகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்போடு செயல்படும் வகுப்பின் செலவுகளுக்கும் வித்தியாசம் உள்ளது..
நேரடி வகுப்பிற்கும், செயல்முறை பயிற்சிக்கும், பாரம்பரிய மதிய உணவிற்கும், மாலை சிற்றுண்டிக்கும், அருகில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து பண்ணைக்கு அழைத்து செல்லும் வாகனத்திற்கும், பயிற்சியின் தகவல் தரத்திற்கும் ஏற்ற விலையை நிர்ணயித்துள்ளார்கள்...
தேவைப்படுபவர்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற விருப்பத்தோடு பகிர்கிறோம்.. நன்றி...
மேலும் தகவலுக்கு https://youtube.com/shorts/1KnJQshPh0A?si=sUtikvP4iJ5eZQs4
மெர்னா இயற்கை வாழ்வியலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி அறிய , இந்த வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்து கொள்ளவும்

பயோ என்சைம் நேரடி செயல்முறை பயிற்சி
பயோ என்சைம் என பலராலும் அறியப்பட்ட "உயிர் நொதியம்"
உயிர் நொதியத்தில் நுண்ணுயிர்களின் பங்கு துவங்கி, அதை எப்படி தயாரித்து, எப்படியெல்லாம் அவற்றை பயன்படுத்த முடியும், மேலும் இவற்றில் உள்ள விற்பனை வாய்ப்பு வரை அனைத்தையும் பற்றி அறிந்து கொள்ளலாம்..
நேரடியாக செயல்முறை பயிற்சியில் முழுமையாக கற்றுக்கொள்ளலாம்..
அனைத்து வித சந்தைகங்களும் தீர்க்கப்படும்...
மேலும் பயோ கேஸ் உருவாக்கத்தில் நுண்ணுயிர்களின் பங்கும், ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் பயோ கேஸ்ஸை நேரில் பார்த்து அதன் புரிதலையும் அன்று பெற்று கொள்ளலாம்..
*நேரடி வகுப்பு*
*பயிற்சி நாள்*: 14.9.25
*இடம்*: மெர்னா இயற்கை வாழ்வியல் மையம், செங்கல்பட்டு
*கட்டணம்* : ரூ.1000 (பயிற்சி ஏற்பாடுகள், பாரம்பரிய மதிய உணவு, சிற்றுண்டி உட்பட)
மேலும் தகவலுக்கு https://youtube.com/shorts/9Vzlpw3MS18?si=c0y8CCwR2Ek_3oIG
மெர்னா இயற்கை வாழ்வியலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி அறிய , இந்த வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்து கொள்ளவும்